உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவதால் மாத்திரம் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் அரசியல் ரீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் நேரடியாகச் சென்று சந்தித்து தனது கோரிக்கையை முன்வைக்க முடி யும். அதனை விடுத்து உண்ணாவிரதமிருந்தால் அனைவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உண்ணாவிரதமிருக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதை வைத்து அரசியல் தான் செய்துகொண்டிருக்கின்றார். முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவரும் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு செயற்படுவதைத் தவிர்த்து ஜனா திபதி ஏதேனுமொரு தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.