மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேபோல், கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி இதனை உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லாஹ்வின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதினை அவரது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.