அவ்வாறு விலகி சென்றாலும் நான் தனியாக போராடுவேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
லிந்துலை மெராயா தோட்டத்தில் வீடுகள் இல்லாத மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 20 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
50 நாட்களில் அமைச்சராக இருந்தவர்கள். இங்கு கட்டப்பட்ட வீடுகள் உடை இல்லாமல் இருப்பதாக விமர்சித்துள்ளார்கள். தற்போது அந்த வீடுகளுக்கு உடை அணியப்பட்டுள்ளதுடன், அலங்கரிக்கப்பட்ட வீடுகளாக உள்ளது. இதனை விமர்சித்தவர்கள் வந்து பார்க்கலாம். நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளிலும் பிழை கண்டுபிடிப்பதற்கே சில விசமிகள் இருக்கின்றன.
நான் 6 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டினால் 10 இலட்சம் ரூபாய் கொமிசன் எடுப்பதாக பாராளுமன்றத்தில் மலையக அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். நான் அமைச்சராக வந்த பிறகு தான் மலையகத்தில் அதிகப்படியான வீடுகள் கட்டப்படுகின்றது.
இதனை பொறுக்க முடியாத தலைவர்கள் அங்கு சரியில்லை. இங்கு சரியில்லை என தெரிவிக்கின்றனர். அதை பற்றி யாரும் யோசிக்க தேவையில்லை. நமக்கு இடம், காணி உறுதி பத்திரம், வீடுகள் என்பன கிடைக்கின்றன.
50 வருட காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் வீடுகளை கட்டியிருந்தால் எமது பிரச்சினை தீர்ந்திருக்கும். கடந்த வெசாக் போயா தினத்தன்று நான் வெளிநாடு சென்றிருந்த பொழுது இங்குள்ள சிலர் ஆங்காங்கே தன்சல் பந்தல்களில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் எனக்கு ரொட்டி சுடுவது வேலை இல்லை. மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பதே எனது வேலையாகும்.
இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்த போது மலையக மக்களுக்கு பத்தாயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். இதற்கமைய அடுத்த வாரத்தில் சகல பகுதிகளிலும் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான இராதாகிருஷ்ணன் கூட்டணியிலிருந்து விலகப்போவதாக பலர் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. அமைச்சர் இராதாகிருஷ்ணன் விலகப்போவதும் இல்லை.
நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம். இதனை சிலர் அரசியல் இலாபத்திற்காகவே பொய்யான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூட்டணியிலிருந்து விலகி சென்றாலும், மக்களின் சக்தியோடு நான் தனியாக போராடி மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பேன் என்றார்.