ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈராக்கின் பிரதமர் ஹெய்டர் அல் அபாபி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின்போது ஈராக்கிய படைகளுக்கு அமரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகளின் படைகளும் உதவியளித்து வருகின்றன.
மொசூல் நகர் 2014ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வருகிறது.
இதன்காரணமாக அங்குள்ள 1.5 மில்லியன் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈராக்கிய அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையிலேயே புதிய படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.