இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது

523 0

මංගලஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32ஆவது கூட்டத் தொடரில் இன்­று புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போதுஐக்­கியநாடு­களின்மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்­கையை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யிட்­டதும் இலங்கை தொடர்­பான விவாதம் ஆரம்­ப­மாகும்.

அதன் பின்னர் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பான தமது கருத்­துக்­க­ளையும் யோச­னை­க­ளையும் வெளி­யி­ட­வுள்­ளன. அதன் பின்னர் இலங்­கையின் சார்பில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர மனித உரிமை பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ளார். இதன்­போது ஏற்­க­னவே உத்­தி­யோ­க­பூர்­வ­பற்­றற்ற வகையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஆணை­யா­ளரின் அறிக்­கைக்கு பதி­ல­ளிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக இலங்கை அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது என்­பது தொடர்­பா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் வாய்­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ளார். எனினும் அந்த அறிக்கை நேற்­றைய தினம் உத்­தி­யோ­க­பூர்வ பற்­றற்ற முறையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த வருடம் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் 18 ஆவது பரிந்­து­ரை­யா­னது இவ்­வாறு வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்ற நிலையில் அர­சாங்­கமும் இதனை முழு­யை­மாக அமுல்­ப­டுத்த தயார் என கூறி­வ­ரு­கின்­றது.

அந்­த­வ­கையில் இன்­றைய தினம் அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் அடை­யப்­பெற்­றுள்ள முன்­னேற்­றங்கள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றுவார்.கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Leave a comment