பயங்கரவாதத்திற்கு துணைப்போனோர் கைது செய்யப்படுவர்’

406 0

பயங்கரவாத  எதிர்ப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும்  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு  துணைப்புரிபவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனித்து செயற்படுவதனூடாக பயங்கரவாத பிரச்சினைககளுக்கு  தீர்வுக்காண முடியாது. புலனாய்வுத்துறையினர் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுப்பது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற ‘கிராமத்தை நோக்கிய அரச சேவை’ வேலைத்திட்டத்தில்  நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனவாதத்தை அடிப்படையாக கொண்டே ஐ. எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் அமைகின்றன.  ஐ.எஸ் பயங்கரவாத  தாக்குதல்கள் மீண்டும்  நாட்டில் இடம்பெறாமல் தடுப்பதற்கு  பயங்கரவாத  எதிர்ப்பு வேலைத்திட்டங்களை வகுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.  பயங்கரவாதத்தை தடைசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்.

இதேவேளை சஹ்ரானின்  அனைத்து  பயங்கரவாத செயற்பாடுகளும் கட்டுபாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பும் முடக்கப்பட்டுள்ளன. ஒருப்பிரச்சினை முடிவுக்கு வரும் போது  இனனொரு பிரச்சினை  உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.  மேலும் இது போன்ற பிரச்சினைகள் இணையத்தள வசதிகளினால்  பரவலடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ. எஸ் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட கூடிய சவால்களை  எதிர்கொண்டு அதன் செயற்பாடுகளை முழுமையாக கட்டுபடுத்த வேண்டுமானால்  பயங்கரவாத எதிர்ப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது அவசியமாகும். இதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து எவராலும் தப்பிக்க முடியாது.