ஊடகவியாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜேவிபி வலியுறுத்தியுள்ளது.
ஜேவிபியின் பிரசார செயலர் விஜித ஹேரத், மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
2009ஆம் ஆண்டு லசந்தவை தாமே கொலை செய்ததாக கூறி கேகாலையில் வசிக்கும் முன்னாள் புலனாய்வு வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
இதன் அடிப்படையில் இராணுவ புலனாய்வினரே லசந்தவே கொலை செய்தமை உறுதியாகியுள்ளது.
எனினும் குறித்த புலனாய்வு வீரர் தனிப்பட்ட ரீதியில் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்திருக்கமுடியாது
அவருக்கு ஒருவர் உத்தரவிட்டிருக்கவேண்டும்
எனவே அந்த உத்தரவை பிறப்பித்தவர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என்று விஜித ஹேரத் கோரியுள்ளார்.