தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில் புதிய இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும்வரை மாணவ-மாணவியர் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டிறுதி விடுமுறை முடிந்து நாளை அரசு மற்றும் தனியாருக்கு சொந்தனான அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், நாளை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவியர் தங்களுக்கான புதிய இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும்வரை பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தமிழக அரசின் போக்குவரத்து துறைசார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.