அமெரிக்காவுடன் போர் என்பது மிகவும் பேரழிவாக இருக்கும் – சீனா பாதுகாப்புத்துறை மந்திரி

420 0

அமெரிக்காவுடன் போர் என்பது மிகவும் பேரழிவாக இருக்கும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார்.

தைவான் மற்றும் தெற்கு சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்காவுடன் பதட்டம் நீடிக்கும் நிலையில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.  தைவான் அதிபராக அதிபர் ட்ஸாய் இங்-வென் 2016-ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக  சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தைவான் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.
இதனால் அமெரிக்காவை சீனா எதிர்க்கிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில் தைவான் கடற்படை நகர்வுக்கு அமெரிக்கா உதவி செய்வதை சீனா விமர்சனம் செய்துள்ளது. சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வேய் பெங்ஹே பேசுகையில், அமெரிக்கா உடனான போர் என்பது பெரும் பேரழிவை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
சீனாவை பிரிக்க வேண்டும் என்ற முயற்சி வெற்றிப்பெறாது. தைவான் விவகாரத்தில் எந்தஒரு தலையீடும் தோல்வியில்தான் முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.