சிறுபான்மையினத்தவர்களால் ஆட்சி பீடமேறிய அரசு தமிழர்களையே ஏமாற்றுகிறது – இராதாகிருஸ்ணன்

327 0

சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளால் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசாங்கத்திலும் தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலைமையே காணப்படுவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவை நிரந்தரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியாவில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவிலே உண்மையானதொரு ஜனநாயகம் நடைபெறுகிறது. இலங்கையில் ஜனநாயகம் எனும் போர்வையில் ஜனநாயகம் இல்லாதத் தன்மையேக் காணப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக்கொள்கிறார்களே தவிர அவர்களுக்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் ஜனாதிபதியே பிரதமரோ வழங்கவில்லை.

மலையக பகுதியில் உள்ள அமைச்சர்களுக்கு சிறந்த அமைச்சு பொறுப்பு வழங்கப்படவில்லை. அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இந்த நாட்டில் எல்லா விடயங்களையும் உண்ணாவிரதமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென்றால் அவ்வாறு முடியாது. அரசியல் ரீதியிலான தீர்மானங்கள் ஜனாதிபதி மூலமாகவே தீர்க்க முடியும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.