தூக்கில் தொங்கி குடும்ப பெண் ஒருவர் தற்கொலை

319 0

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொட்டியடி இந்தியன் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும் 26 அகவையுடைய த.கிருசாந்தினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (01) காலை உறவினர்கள் சென்று பார்த்த போது இவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இவரின் உயிரிழப்பு குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.