முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் 617 ஏக்கர் காணிகளில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் இதனை சுவீகரிக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அளவீடு செய்ய முற்பட்ட போது மக்கள் எதிர்ப்பினால் நில அளவீடு கைவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் செம்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி பொலிஸாரின் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட சமயம் அன்றைய தினமும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனையடுத்து குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி கோரி கடந்தமாதம் 19ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட நிலையில்,அன்றைய தினம் அதற்கான அனுமதிகள்
இதில் பொதுமக்களின் காணிகள் அதிகளவில் உள்ளதாகவும்,அத்துடன் இதனை கடற்படையினருக்கு கொடுப்பது என்பது ஒட்டுமொத்த கடற்தொழில் வளத்தையும் கொடுப்பதற்கு சமனாகும் என்றும், எனவே தனியாருக்கு சொந்தமான 358 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டது.
இதேவேளை அப்பகுதியிலுள்ள அரச காணிகள் கடற்தொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஒதுக்கப்படவேண்டும் என்றும் அத்துடன், அதில் உள்ள கடற்படைமுகாம் முற்றாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவேண்டும் எனவும் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனவே முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்றி அந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.