இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உலக பொருளாதார ஸ்திரதன்மையுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என அமரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவிச்செயலாளர் மான்பிரீட்சிங் ஆனந்த் இதனை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த நாடுகள் சர்வதேச ஒழுங்குகளை பின்பற்றி கடற்கொள்ளை மற்றும் போதைவஸ்துக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக செயற்படமுடியும் என மான்பிரீட்சிங் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் உலக பொருளாதார ஸ்தீர நிலையையும் இந்துசமுத்திர பாதுகாப்பையும் பிரிக்கமுடியாது என்று ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.