அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்வை அடைந்த பின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனிருத்த தெரிவித்தார்.
இலவச சுகாதாரத்துறையானது பல கேள்விகளுக்கு இன்று உள்ளாகியுள்ளமையினை சுட்டிகாட்டிய இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.