சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது

343 0

கொடதெனியாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல , பதுராகெட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பேலியாகொட குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தேமுல்ல பாதுராகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவரிடமிருந்து 110 சட்டவிரோத மதுபான போத்தல்களும் , மதுபான வடிக்கதுக்காக பயன்படும் 22 இலட்சத்து 68 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாக்களும் ( 12 பீப்பாய்கள் ) மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.