சில சக்திகள் தமது சுய இலாபங்களுக்காக அடிப்படைவாத்தை தூண்ட முயற்சிப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும, அரசாங்கம் அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்காது என்றும் குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஒவ்வொரு சமூகத்துக்கும் தனியான சட்டபட காணப்படுகின்றன. இனிவரும் காலங்களின் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான சட்டத்திங்களை கொண்டவர நடவடிக்கை எடுக்கப்படும். அவசரக்கால சட்டதின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ள புர்கா ஆடைக்கும் சில அமைப்புகளுக்கு எதிர்காலத்தில் முற்றாக தடைவிதிக்கப்படும். அடிப்படைவாதிகளுக்கு அரசாங்கம் ஒருபோது இடமளிக்காது.
சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான குறிக்கோளாகும். நாட்டின் அமைதிக்குசவாலை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.