இந்த முறையாவது மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி

348 0

இந்த முறையாவது மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மக்களின்…
தூத்துக்குடி மக்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயமாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இங்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதற்கு நிச்சயமாக பாடுபடுவேன்.
இங்கு மிக முக்கியமாக இருக்கக்கூடியது தண்ணீர் பிரச்சினை. தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டியது முக்கியமானது. இந்த பிரச்சினையை தீர்க்கும் முயற்சியை முன்னெடுப்போம். அதனை தாண்டி மக்கள் பிரச்சினைகள் பல உள்ளன.
மகளிர் மசோதா
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எல்லோரையும் அரவணைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். கடந்த ஆட்சியில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வில்லை. இந்த முறையாவது மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பொருளாதாரத்தில் இருக்கும் சரிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.