சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது மாவட்ட செயலாளர்கள்- சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கட்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற, பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் இக்கூட்டத்தில் தக்க ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.