தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்புகள் வேகமாக பரவ ஆரம்பித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதனால் டெங்கு நோயாளர் அல்லது டெங்கு என்று சந்தேகிக்கப்படும் காய்ச்சலுக்குள்ளாகும் நோயாளர் மூலம் மற்றுமொருவருக்கு டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு பகல் வேளையில் டெங்கு வலையை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் இந்த பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நுளம்புகள் காலை 6 மணி தொடக்கம் 11 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி தொடக்கம் 7 மணி வரையிலும் வலுவுடன் செயற்படக்கூடியது. டெங்கு நுளம்பு கடிப்பதை தடுப்பதற்கு நீண்ட உடைகளை அணிதல் டெங்கு நுளம்புகள் தாக்கத்தை தடுப்பதற்கு கிறீம் வகைகளையும் பயன்படுத்த முடியும். என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எவருக்காவது கடும் காய்சலுடன் தலைவலி உடம்புவலி ஒக்காரம் வாந்தி சர்மத்தில் சிவப்பு தழும்புகள் உள்ளிட்டவை காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை அல்லது பொருத்தமான வைத்தியரை நாடி சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டெங்கு தடுப்பு பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
சிறுவர்களுக்கும் கற்பினி தாய்மார்களுக்கும் காய்சல் நிலை ஏற்பட்டால் உடனடியாக தாமதிக்ககூடாது வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள மிகவும் அவசியமாகும் என்றும் பிரிவு அறிவித்துள்ளது.