சர்வதேசத்திடம் முறையிட்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தலாம் என எவரும் முயற்சிசெய்தால் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கெல்லாம் சிறீலங்கா ஒருபோதும் அடிபணியப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாடு விடுபட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் சர்வதேசத்தை திருப்திப்படுத்தியுள்ளது எனவும், நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் சாதகமான அடைவுகளை எட்டியுள்ளது.
இதன் அடிப்படையில், நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலும், சிறுபான்மையின மக்கள் மற்றும் நாட்டின் ஐக்கியத்தைப் பாதிக்காத வகையிலும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.