ஒரு புறம் அரசாங்கத்தின் குறைப்பாடுகளை மறைக்கவும், மறுபுறம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கவும் பாராளுமன்ற தெரிவு குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை இன்றும் அரசாங்கம் கேலிக் கூத்தாக்கியுள்ளது. இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய தேசிய பாதுகாப்பு தொடர்பிலான இரகசியங்களை பாதுகாப்பு துறை சார்ந்தவர்கள் பகிரங்கப்படுத்துகின்றார்கள். இவர்களின் செயற்பாடு அடிப்படைவாதிகளுக்கு மேலும் சாதகமாக அமையும்.
ஆகவே தெரிவு குழுவின் கருத்தாலோசனைகளை ஊடகங்களில் ஒளிப்பரப்புவதை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.