நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களை அடுத்து சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஓரங்கமாக சுற்றுலாத்துறையை சார்ந்து இயங்கும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை நிவாரணங்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.