பிரான்சு திரான்சி (Drancy) நகரசபை முன்றலில் நேற்று 28.05.2019 திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலையின் கவனயீர்ப்பும் கண்காட்சியும் காலை 11.00 மணி முதல் மாலை 18.30 வரை இடம்பெற்றது.
வெளிநாட்டு மக்களுக்கான துண்டுப்பிரசுரங்களை திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
திரான்சி நகரபிதா aude lavail-lagarde அவர்களும், பிரான்சுUDI கட்சியின் தலைவரும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரும். பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆய்வுக்குழுவின் உபதலைவருமான M. Jean-Christophe LAGARDE. அவர்களும் இக் கவனயீர்ப்பில் கலந்துகொண்டனர். மற்றும் அவர்கள் இருவருடனான 30 நிமிட சந்திப்பு நகரசபையில் நடைபெற்றது. aude lavail-lagarde மற்றும் Jean-Christophe LAGARDE ஆகிய இருவரிடமும் எமது கோரிக்கை அடங்கிய மனுவழங்கப்பட்டது.
குறிந்தசந்திப்பில் திரான்சி நகரபிதா அவர்கள். தமிழர்களுக்கு திரான்சி மாநகரசபை எப்போதும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.
Jean-Christophe LAGARDE அவர்கள் UDI கட்சிதொடர்ந்து. தமிழர்கள்விடயத்தில் கவனம் எடுக்கும் என்பதுடன் தமிழருக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றதுடன், பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழருக்கான தனதுகுரல் ஒலிக்கும். தொடர்ந்துதான் தமிழர்களுடன் பயணிப்பேன் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிறைவுற்றது.