அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. அரச தினைக்களங்களில் 40% பெண்கள் காணப்படுகின்றனர் ஆயினும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்வதாக இன்று திங்கட்கிழமை யாழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்“உள்ளூராட்சி திணைக்களங்களில் பெண்களுடைய பங்களிப்பை வலுப்படுத்தல்” எனும் இக்கருத்தரங்கு வரவேற்கத்தக்கது. உலகில் முதல் பெண் பிரதம மந்திரி காணப்பட்டபோதும் உள்ளூராட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் வகிபங்கு குறைவாகவே உள்ளது.
குறிப்பாக தமிழ்பகுதிகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறுகியதாக காணப்படுகின்றது. எனினும் இது மாற்றப்பட வேண்டும். பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும். பெண்களின் குரல் பாராளுமன்றதில் வலுவாக ஒலிக்கப்படவேண்டும். இதன் ஆரம்பகட்டமாக உள்ளூராட்சி தேர்தல் பெண்களிற்கு 25% ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இது பெண்களிற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
அரசியலைத் தவிர ஏனைய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அரச திணைக்களங்களில் பெண்கள் தற்போது 40 சதவீமானவர்களாக காணப்படுகின்றனர். பெண்களின் சதவீதம் 100 ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சிலகாலங்களில் ஆண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்கக்கோரி கோரிக்கைகள் முன்வைக்கின்ற சந்தர்ப்பங்களும் வரலாம்.
இவ்வாறு அரசியலை தவிர ஏனைய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ஆயினும் அரசியலில் பின்னிப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றிற்கான தீர்வினை முண்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.