பெல்மடுல்ல பொலிஸ் பிரிவில் நாரங்கொட பிரதேசத்தில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 07.30 மணியளவில் தடியொன்றால் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
நாரங்கொட, பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.