யாழில் வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்பு!

374 0

யாழ்ப்பாணம் சுவாமியார் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வீட்டை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.