உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 04ம் திகதி கூட உள்ளது.
அன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட தெரிவுக் குழு நேற்று தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.
நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஹெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறையின் பிரதானி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர்.