அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு கடற்படையினரும் கொன்னோருவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை , தனமல்விலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32- 42 வயதுக்கிடைப்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 500 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் குறித்த கேரளா கஞ்சா தொகையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.