மஹிந்தவின் மைத்துனர் சற்றுமுன் கைது

461 0

625-590-560-350-160-300-053-800-944-160-90பிரபல வர்த்தகரும், ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினருமான திருக்குமார் நடேசன் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வானை பிரதேசத்தில் அமைந்திருந்த ஆடம்பர மாளிகை ஒன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கூறப்பட்டு வந்தது.

எனினும் குறித்த மாளிகைக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று அவர் நீதிமன்றத்தில் மறுத்திருந்தார். அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மாளிகை அமையப்பெற்றிருக்கும் காணி உறுதியில் திருக்குமார் நடேசனின் பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறித்த மாளிகை அமைந்துள்ள நிலத்தை வாங்குவதற்கு திருக்குமரன் நடேசன் பண உதவி செய்திருந்தார். அத்துடன் காணிக்கான உறுதி அவரது பெயரிலேயே பதியப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவர் இன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை அவர் பூகொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ்நிதி மோசடிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் அவர் தற்போது பூகொடை நோக்கி பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.