இலங்கை வரவுள்ள அமெரிக்க உதவிச் செயலர்

220 0

அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான ராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் க்ளார்க் கூப்பர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தனது விஜயத்தை ஆரம்பித்த அவர் ஜூன் 7 ஆம் திகதி வரை இந்தியா , இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.

இதையடுத்து இலங்கையில் ஐ எஸ் தாக்குதல் இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் எதிர்கால பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து அவர் இலங்கையின் உயர்மட்ட பிரமுகர்களுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.