தனமல்விலவில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி மீட்பு

216 0

தனமல்வில – சூரியஆர – குமாரகம பிரதேசத்தில் பொலிஸ் அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வெடி பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த பொதியில் பல வகையான வெடிபொருட்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.