அர­சாங்­கத்தை விமர்­சிப்பது­னூ­டாக  ஆட்­சியை கைப்­பற்றிக் கொள்­ளலாம் என்ற  பகல் கனவு  ஒரு­போதும் பய­ன­ளிக்­காது என ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலு­வூட்டல் அமைச்சர் தயாகமகே தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட வாறு  தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­தின்­போது அரச வரு­மானம்  முறை­யற்ற அர­ச­முறை  கடன்­க­ளுக்கு  வட்­டி­யினை  செலுத்தும் அள­விற்கே  காணப்­பட்­டது.

ஆனால்  நிலைமை தற்­போது  முழு­மை­யாக மாற்­ற­ம­டைந்து விட்டது. கடந்த அர­சாங்கம்  பெற்ற முறை­யற்ற அர­ச­முறை கடன்கள் பெரு­ம­ளவில் வட்­டி­யுடன் மீள் செலுத்­தப்­பட்­டுள்­ளன.   அர­சாங்கம் பல  புதிய  கொள்கை திட்­டங்­களை வகுத்­தது.  அனைத்து  திட்­டங்­க­ளுக்கும் எதிர்த்தரப்­பி­னரே தொடர்ந்து தடைகளை ஏற்­ப­டுத்­தி­னார்கள். அர­சி­ய­ல­மைப்புக்கு முர­ணாக அரசியல்  சதியின் ஊடாக   ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி 52   நாட்கள் முறை­யற்ற நிர்­வா­கத்தை மேற்­கொண்­ட­மையின் விளைவு  இன்றும் தொடர்­கின்­றன.

ஐக்­கிய தேசிய கட்சி நவீன திட்­டங்­களை உள்­ள­டக்­கிய புதிய  பல கொள்கை திட்­டங்­களை வகுத்து அத­ன­டிப்­ப­டையில் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து செல்­கின்­றது. அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை கண்டு இன்று  எதிர்த்தரப்­பினர் அச்சம் கொண்டுள்­ளனர். இதன் கார­ண­மா­கவே  போலி­யான குற்­றச் சாட்டுக்­களை முன்­வைத்து  அத­னூ­ டாக அர­சியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

2020 ஆம் ஆண்டு  ஆட்­சியை  கைப்­பற்­று­வதற்கு  எதிர்த் தரப்பினரிடம் எவ்­வித முறை­யான திட்­டங்­களும் கிடை­யாது. அரசாங்­கத்தை விமர்­சித்து அத­னூ­டாக  ஆட்­சியை கைப்­பற்றிக் கொள்­ளலாம் என்று பகல் கனவு காண்­பது ஒரு­போதும் பயனளிக்காது.

எமது அர­சாங்­கத்­திலும் ஒரு  சில குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. பல  நெருக்­க­டி­க­ளுக்கும், சவால்­க­ளுக்கும் மத்­தி­யி­லேயே  கடந்த    நான்கு வருட கால­மாக  அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனால் ஒரு­போதும்  ஜனநா­ய­கத்­திற்கு அப்பாற்பட்டு  சர்வாதிகாரமான முறையில் செயற்படவில்லை.

இதன் காரணமாகவே  நாட்டு மக்கள் தமது கருத்துக்களை  சுதந்திரமாக தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறான  பேச்சு சுதந்திரம் கூட கடந்த அரசாங்கத்தில்  காணப்படவில்லை என்றார்.