பாடசாலை மாணவர்களுடைய சீருடைக்கான பண வவுச்சர்கள் அடுத்த மாதம் 01 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தினை விட இலகுவாக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய முறையில் இந்த வவுச்சர்களை தயாரித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய தவணைகள் ஆரம்பமாகும் போது, புதிய சீருடைகளுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் வகையில் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மாணவர்களுக்குரிய காற்சட்டைகள் மற்றும் மேற்சட்டை போன்றவற்றிக்கு வவுச்சர்கள் தனித்தனியாக வழங்கப்படும் எனவும், தரம் ஒன்றிற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்களுக்கு பாடசாலையில் இணைந்தவுடன் வழங்கப்படும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.