கண்­கா­ணிப்­புகள் பல­வீ­ன­மாக இருப்பின் மீண்டும் என்ன நடக்கும் என்­பதை கூற முடி­யாது – பாது­காப்பு செய­லாளர்

195 0

குறு­கிய காலத்தில்  நாட்­டினுள் நடத்­தப்­ப­ட­வி­ருந்த  தாக்­குதல்  திட்­டங்கள்  முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன.  பதற்­ற­க­ர­மான சூழல் ஒன்று உரு­வா­வது  99 வீதம்  கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. எனினும் கண்­கா­ணிப்பு பல­வீ­ன­மானால் எதிர்­கா­லத்தில் மீண்டும் சிக்கல் ஏற்­ப­டலாம் என பாது­காப்பு செய­லாளர் சாந்த கோட்­டே­கொட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்தார்.

செவ்­வாய்க்­கி­ழமை குரு­நாகல் பகு­தியில்  குழப்­ப­மேற்­ப­டுத்த தேரர்கள்  சிலரும் அவர்­க­ளுடன் இணைந்து பலம்­பொ­ருந்­திய நபர்கள் சிலரும் முயற்­சித்­தனர் எனவும் பாது­காப்பு செய­லாளர் சுட்­டிக்­காட்­டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து உண்­மை­களை கண்­ட­றிந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று முதல் தட­வை­யாக கூடி­யது.  நேற்­றைய தினம் விசா­ர­ணை­க­ளுக்­காக அழைக்­கப்­பட்ட பாது­காப்பு செய­லாளர் சாந்த கோட்­டே­கொ­ட­விடம் தெரி­வுக்­குழு எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதில் தெரி­விக்­கை­யி­லேயே   அவர் இந்த கார­ணி­களை முன்­வைத்தார்.

அவர்  தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

தற்­போது நாட்டில் இடம்­பெற்­றுள்ள பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து அவற்றை இல்­லா­தொ­ழிக்கும் வகையில் நட­வ­டிக்கை எடுக்க வெவ்­வேறு கட்­டங்­களில் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக உட­ன­டி­யாக இவற்றை கையாளும் நட­வ­டிக்­கை­களில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இப்­போது நாட்டில் இல்­லாத வகையில் பாது­காப்பு தரப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. 24 மணி­நேர தேடுதல் மற்றும் கண்­கா­ணிப்பு நகர்­வுகள் மூல­மாக நாட்­டுக்­கான அச்­சு­றுத்தல் 99 வீதம் இல்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் நீண்­ட­கால கண்­கா­ணிப்பு நகர்­வுகள் அவ­சியம் என்­பதை மறுக்க முடி­யாது. கண்­கா­ணிப்­புகள் பல­வீ­ன­மாக இருப்பின் மீண்டும் எதிர்­கா­லத்தில் என்ன நடக்கும் என்­பதை கூற முடி­யாது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்த அமைப்­புகள் குறித்த தக­வல்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே அறிய முடி­கின்­றது. ஆகவே  தகவல் பரி­மாற்­றத்தில் ஏற்­பட்ட பல­வீனம் அல்­லது புல­னாய்வு அதி­கா­ரிகள் இடையில் ஏற்­பட்ட தடங்­கல்கள் கார­ண­மா­கவே சரி­யான தகவல் பரி­மாற்றம் ஒன்று இல்­லாது போயுள்­ளது என்றே நான் நினைக்­கின்றேன். மேலும் இந்த பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை   விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் போன்று கருத முடி­யாது. இவர்­க­ளிடம் ஆயு­தங்கள் அதி­க­மாக இல்லை. வெடி­பொ­ருட்கள் இருந்­துள்­ளன. ஆனால் இவர்­களை பொறுத்­த­வரை மன­நிலை தான் இவர்­களின் ஆயுதம் என்றே கருத வேண்டும்.

பொது­வாக வாக­னங்­களில் வந்து மக்­களை மோதிக் கொல்­வது, அல்­லது கத்­தி­களால் வெட்டும் தாக்­குதல் யுக்­திகள் போன்­ற­வற்றை  கையா­ளலாம். எவ்­வாறு இருப்­பினும் நீண்­ட­கால கண்­கா­ணிப்பு இதில் அவ­சியம். இந்த நாட்டில் சிங்­கள, தமிழ், ஆங்­கில மொழிகள் உள்ள நிலையில் அரபு மொழிகள் அவ­சியம் இல்லை என்­பதை  எனது தனிப்­பட்ட ஆலோ­ச­னை­யாக பதி­வு­செய்ய முடியும்.   சில கல்வி முறைகள் இந்த நாட்­டிற்கு அவ­சி­ய­மில்லை.  இவ்­வா­றான செயற்­பா­டுகள் தான் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

குரு­நாகல் பகு­தியில் நேற்று ( நேற்று முன்­தினம் ) குழப்பம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த சில திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக வெளி­மா­வட்­டங்­களில் இருந்து நபர்கள் அங்கு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த திட்டம் தீட்­டி­யுள்­ளனர். இதில் தேரர்கள் சிலரும் பலம்­பொ­ருந்­திய நபர்கள் சிலரும் இருந்­துள்­ளனர். எனினும் எமது படை­களை கொண்டு உட­ன­டி­யாக இவற்றை தடுக்க எம்மால் முடிந்துள்ளது.இந்த விடயங்களில் ஊடகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும்.

இன்று சமூக ஊடகங்களின் மூலமாக தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு அனாவசியமாக குழப்பங்கள் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அண்மையில் கூட (யு. என்  )அடையாளம் பொறித்த எமது வாகனங்கள் பயணித்ததை அமெரிக்க படையினர் இலங்கையில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெ ளியிட்டன. இவை  மோசமான செயற்பாடுகள் என்றார்.