முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறு அவர் நாமலை திட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
“முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் அறிவு ரீதியாக பேசவும். முட்டாள் தனமாக கதைத்து நாட்டில் நகைச்சுவையாளராக வேண்டாம். நாட்டின் தலைவராகுவதற்கு அல்லவா முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அவமானப்பட்டது போதாதென்று திருடர்கள் குறித்து புலம்ப சென்று மீண்டும் அவமானப்பட்டீர்கள். கதைப்பதற்கு முன்னர் இரண்டு முறை சிந்தித்து பேசி பழக வேண்டும் என குமார வெல்கம, நாமல் ராஜபக்சவை திட்டியுள்ளார்.
இதன்போது நாமல் ராஜபக்ச பதில் கூறாமல் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எப்படியிருப்பினும் இதன் ஊடாக நாமல் மற்றும் வெல்கமவுக்கு இடையில் பனிப்போர் ஒன்று ஆரம்பமாகியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.