இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் சாடியுள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் பெயர்களைப் பயன்படுத்தி கள்வர்களை பாதுகாக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமான முறையில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்பார்த்த பணிகளை ஆற்றத் தவறியுள்ளதாகத் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.