லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் யார்?

319 0

111லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலர் விஜித ஹேரத், மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு லசந்தவை தாமே கொலை செய்ததாக கூறி கேகாலையில் வசிக்கும் முன்னாள் புலனாய்வு வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். இதன்போது அவர், தாமே கொலையை செய்ததாக கூறி கடிதம் ஒன்றையும் தமது இடுப்பில் செருகியிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இராணுவ புலனாய்வினரே லசந்தவே கொலை செய்தமை உறுதியாகியுள்ளதாக விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த புலனாய்வு வீரருக்கும் லசந்தவுக்கும் இடையில் தனிப்பட்ட கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர், யாரோ ஒருவரின் உத்தரவை நிறைவேற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது. எனில் லசந்தவை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் யார் என்பதை கண்டறியவேண்டிய தேவை உள்ளது என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.