பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகியை சந்தித்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக நீண்டகாலம் போராடிய ஆன் சாங் சூகி அவர்களுடைய சேவை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய பாராட்டுக்களை இதன்போது தெரிவித்ததோடு, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பில், இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆன் சாங் சூகி ஜனாதிபதியின் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தன்னுடைய திருப்தியினையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலையம், ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
நேபாளத்தில் பௌத்த வழிப்பாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா வழங்கிய இலங்கை வழங்கிய உதவிகளுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுடைய அரசியல் வாழ்க்கையானது தமக்கு முன்மாதிரியாக திகழ்வதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் இதன்போது தெரிவித்தார்.
பின்னர் பூட்டானின் பிரதமர் ஷெரிங் டொப்கேயை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
இலங்கை மற்றும் பூட்டானுக்கிடையில் காணப்படும் நட்பானது பௌத்த தத்துவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக தெரிவித்த பூட்டான் பிரதமர், பூட்டானில் பௌத்த கல்வியின் அபிவிருத்திக்கு இலங்கையின் உதவிகளை மேலும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.