ஜார்கண்ட் மாநிலம் குச்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 11 வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் சராய்கெல்லா பகுதி அருகே குச்சாய் என்ற இடம் உள்ளது. சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு படையினர் அங்கு முகாம் இட்டு இருந்தனர். இந்த நிலையில், அங்கு சிறிய ரக குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு நடைபெற்றதும், மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பில், 11 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.