கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியரை ஒருபோதும் நிரபராதியாக நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது சுகாதார அமைச்சினூடாக விசாரணைகளை முன்னெடுக்கவென வைத்திய சபையின் வைத்தியர் ஒருவரின் பங்கேற்ப்புடன் அனுபவம் வாய்ந்த மூன்று வைத்தியர்கள் அடங்கிய விசாரணை குழுவொன்றை நியமிக்க பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியென நிரூபிக்ப்படுவாராக இருந்தால் அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சுகாதார அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.