அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

357 0

வெலிமட, நுகதலாவ பகுதியில் இராணுவ, விமானப்படையின் ஆடைக்கு ஒப்பான ஆடைகள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேக நபரிடம் இருந்து 58 அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.