கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணை வழங்கப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் 8 ஊழியர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் அவர்கள் அங்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.