மினுவங்கொடை நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசால்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் மூன்று பிரதான சந்தேக நபர்களையும் நாட்டை விட்டு வெளியேற மினுவாங்கொடை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மினுவாங்கொடை பொலிஸார் இன்று மினுவாங்கொடை நீதிவான் கேசர சி.ஏ. சமர திவாகர முன்னிலையில் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளின் பின்னனியில் இருப்பதாக நம்பப்படும் மதுமாதவ அரவிந்த, பிரபல வர்த்தகர்களான மினுவாங்கொடை – பொல்வத்த பகுதியைச் சேர்ந்த கே.பி. அத்துல தயாரத்ன, ஹீனடிய – குருகம பகுதியைச் சேர்ந்த கே. நுவன் உபேந்ர ஆகிய மூவருக்கே இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் பொலிஸ் விசாரணைகளுக்காக ஆஜராகாது மறைந்துள்ள நிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.