அவசரகால சட்டத்தை நீட்டிக்க முடியாது – சம்பிக்க

331 0

தேசிய பாதுகாப்பை  பலபடுத்துவதற்காக தொடர்ச்சியாக அவரசகால சட்டத்தை கையாள முடியாது. ஆகவே பயங்கரவாத செயற்பாடுகள், அடிப்படைவாத செயற்பாடுகள் மற்றும் இன குரோத பேச்சுக்களை தடுக்க நிரந்தரமான சட்டம் ஒன்றினை உருவாக்கி பிரச்சினைக்கு தீர்வுக்கான வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சகல மக்களுக்குமான பொது சட்டமே அவசியம் எனவும் மாறாக ஒரு சமூகம் மட்டும் தனித்து செயற்படும் சட்டங்களுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று அஸ்கிரிய பீட மாநாயக தேரர்களை சந்தித்து தமது “தேசத்துக்கான வழி ” அமைப்பின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.