வாகன விபத்தில் ஒருவர் பலி ; நால்வர் படுகாயம்!

347 0

மாத்தளை பலாபத்வெல என்ற இடத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி மோதலில் ஒருவர் மரணித்துள்ள நிலையில் நான்கு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மாத்தளை பலாபத்வெல என்ற இடத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியதோடு முன்னால் வந்த கெப்ரக வாகனத்திலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் அவர்களை  மாத்தளை வைத்தியசாலையில் அனுமதித்த  பின்னர் முச்சக்கர வண்டிச் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர். தொலபிஹில்ல என்ற இடத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாத்தனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.