ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பில் தெஹிவளை சந்தேக நபர் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமை பாரிய குற்றமாகும். ஆகவே இவரை தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் சிறைப்பிடிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் புதிதல்ல ச.தொ.ச மோசடி விவகாரம் , வில்பத்து வன அழிப்பு விவகாரம் தொடர்பில் ஆதார பூர்வமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதுவரையில் இவருக்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முறையாக எடுக்கவில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் இவருக்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சாதாரமானவை அல்ல, விரைவில் இதற்கு ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.