செஞ்சோலை குண்டு தாக்குதலுக்கு கட்டளை இட்ட போர்க்குற்றவாளி விமானப்படை தளபதியாகிறார்!

623 0

சிறிலங்கா விமானம் படையின் புதிய தளபதியாக போர்க்குற்றவாளியான எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1986ம் ஆண்டு விமானி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பின் நான்கம் கட்ட ஈழப்போரின் போது சிலாவத்துறை ஆக்கிரமிப்பு முயறச்சியில் காயமைடைந்து களமுனையை விட்டு வெளியேற்றப்பட்டவர் ஆவார்.

அதன் பின் இந்தியா சென்று பயிற்சி பெற்ற பின் 2005ம் ஆண்டு தொடக்கம் 4ம் கட்ட ஈழப்போருக்கான விமானப்படை ஒழுங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்த பதவியில் இருந்த பொழுதே செஞ்சோலை வளாகம் மீதான குண்டு தாக்குதல்,புலிகளின் குரல் வானொலி மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் பல மக்கள் வதிவிடங்கள் மீதான குண்டுத்தாக்குதல்களும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மிகமுக்கியமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு வாங்குவதற்காக நின்ற சிறார்கள் மீது நடந்த விமான தாக்குதலும் இவருடைய கட்டையின் பேரிலேயே நடைபெற்றது.

இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்திட்டம் எனும் பெயரலில் போர்க்குற்றவாளிகளையும் குற்றவாளிகளையும் மீண்டும் பதவிகளுக்கு கொண்டுவந்து தமிழ் முஸ்லீம் மக்களின் இருப்பை மேலும் கேள்விக்குறியாக்கிறது சிங்கள தேசம்