கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைதீவுக்கான இறங்குதுறை புனரமைக்கப்படுகிறது.
இதற்கான கட்டுமானப் பொருட்கள் இரணைமாதா நகரிலிருந்து படகு மூலல் எடுத்துச் செல்லப்படுகிறன. பிரதேச மக்களின் நன்மை கருதி குடிநீர் கிணறு புனரமைத்தல், நீர்த்தாங்கி அமைத்தல், குடிநீர் விநியோகக் குழாய்கள் பொருத்தும் வேலைகளும் இடம்பெறுகின்றன.
இதற்காக அரசாங்கம் UNDP நிறுவனத்தின் உதவியுடன், சுமார் 2 கோடியே 80 இலட்சம் ரூபா நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.