எயார் மார்சல் கபில ஜயம்பதி ஓய்வுப் ​பெறவுள்ளார்!

343 0

விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி நாளை மறுதினத்துடன் ஒய்வு பெறவுள்ளார்.

இதற்கமைய, புதிய விமானப்படைத் தளபதியாக விமானப்படையின் பிரதானி எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுப் பெறும் எயார் மார்சல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.