ஜனாதிபதி தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிப் பெறும் மக்கள் அந்தஸ்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. பொது வேட்பாளரை களமிறக்கி அதனுடாக அரசாங்கத்தை அமைப்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைகளாக காணப்படுகின்றது. இம்முறை எவரை களமிறக்கினாலும் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை புறக்கணிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜனபெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் விவகாரம் எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்று அனுமானங்களின் ஊடாக குறிப்பிட முடியாது.
கூட்டணியமைத்தாலும், அமைக்காவிடினும் பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் நடைமுறையில் காணப்படுகின்ற கட்சியின் பெயரிலும், தாமரை மொட்டு சின்னத்திலும் எக்காரணத்தினாலும் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.